கோழி உப்புக்கறி செய்ய தேவையான பொருள்கள் :
கோழி – 1 கிலோ
தக்காளி – 2
வெங்காயம் – 2
மிளகாய் வற்றல் – 6
இஞ்சி சாறு – 2
பூண்டு விழுது – 2
உளுந்து – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
பட்டை – துண்டு
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லித் – சிறிது
உப்பு – சிறிது
எண்ணெய் – சிறிது
முதலில் வெங்காயத்தை நீளவாட்டிலும், தக்காளியைச் சிறு துண்டுகளாகவும் நறுக்கி வைக்கவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். கோழியைச் சுத்தம் செய்து துண்டுகளாக்கி வைக்கவும்.
அதன் பின் சுத்தம் செய்த கோழித் துண்டுகளுடன் இஞ்சி சாறு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துப் பிரட்டி சுமார் 4 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கடுகு, சீரகம், வெந்தயம், உளுந்து, மிளகாய் வற்றல் மற்றும் கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். கடுகு வெடித்ததும் பூண்டு விழுதைச் சேர்த்து 2 நிமிடங்களுக்கு வதக்கவும்.
பின்பு வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து தீயைச் சற்றுக் கூடுதலாக வைத்து, எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும்.
அடுத்து ஊற வைத்திருக்கும் கோழித் துண்டுகளைச் சேர்த்து நன்கு பிரட்டி வேகவிடவும். கோழி நன்றாக வெந்து மிருதுவானவுடன் கொத்தமல்லித் தழைத் தூவி இறக்கிக் பரிமாறவும். சுவையான கோழி உப்புக்கறி ரெடி.