Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அருமையான சுரைக்காய் மசாலா… செய்து பாருங்கள் …!!!

சுரைக்காய் மசாலா செய்ய தேவையான பொருள்கள் :

சுரைக்காய்                           – 1 கிலோ
தயிர்                                        –  2 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட்    –  2 டீஸ்பூன்
சீரகம்                                      –   2  டீஸ்பூன்
மல்லி தூள்                          –   3 டீஸ்பூன்
சீரகப் பொடி                         –   2 டீஸ்பூன்
மிளகாய் தூள்                     –   3 டீஸ்பூன்
மஞ்சள் தூள்                        –    2 டீஸ்பூன்
கரம் மசாலா                       –    1 டீஸ்பூன்
உப்பு                                        – தேவையான அளவு
எண்ணெய்                          –    2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர்                               –    2கப்
கொத்தமல்லி                   –   சிறிது

 செய்முறை :

முதலில் சுரைக்காயை தோலுரித்து, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்தமும், சீரகம் போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள சுரைக்காயை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

அதன் பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, சீரகப் பொடி, மல்லி தூள், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும். பிறகு தயிரை நன்கு அடித்து, அத்துடன் சேர்த்து கிளறி, உப்பு தூவி, 3-4 நிமிடம் கொதிக்க விட வேண்டும். அடுத்து தண்ணீர் ஊற்றி, 8-10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

அடுத்து  மூடியை நீக்கிவிட்டு, சுரைக்காய் வெந்துவிட்டால், அதில் கரம் மசாலா தூவி கிளறி, இறக்கி விட வேண்டும். இப்போது அருமையான சுரைக்காய் மசாலா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி, சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

Categories

Tech |