பன்னீர் தோசை செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி – ஒரு கப்
புழுங்கலரிசி – ஒரு கப்
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
துருவிய பன்னீர் – ஒரு கப்
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசியை ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். பன்னீரை துருவி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயையும், கொத்துமல்லியையும் பொடியாக ஆய்ந்து வைத்து கொள்ளவும்.
பின்னர் ஊறிய அரிசியை உப்பு சேர்த்து மிருதுவாக அரைத்து எடுக்கவும். அதனுடன் துருவிய பன்னீர் ஒரு கப், பச்சை மிளகாய் 2, கொத்தமல்லி ஒரு கைப்பிடி சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலக்கி வைக்கவும்.
தோசை கல்லில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கலக்கி வைத்துள்ள மாவை அதில் ஊற்றி கனமான தோசைகளாக சுட்டு எடுக்கவும். இதில் சோயா பன்னீர் சேர்த்தும் செய்யலாம்.
இந்த தோசை உடலுக்கு மிகவும் நல்லது. புளிப்பு தன்மை வேண்டியவர்கள் மாவை 5 மணி நேரம் புளிக்க வைத்து அதன் பின்னர் பன்னீர் சேர்த்து செய்யலாம். அவ்வளவுதான் பன்னீர் தோசை தயார். அதை சூடாக சாப்பிட்டு பாருங்க சுவை அருமையாக இருக்கும்.