திருக்கை மீன் குழம்பு செய்ய தேவையான பொருள்கள் :
திருக்கை மீன் -1கிலோ
எண்ணெய் – 7 ஸ்பூன்
சி.வெங்காயம் -15
தக்காளி -3
பச்சை மிளகாய் -5
மஞ்சள் தூள்,மிளகாய் தூள் -2 ஸ்பூன்
பூண்டு -10
மல்லித்தூள் -4 ஸ்பூன்
புளி -2 நெல்லி அளவு
வெந்தயம் -1 ஸ்பூன்
சோம்பு -1ஸ்பூன்
கறிவேப்பில்லை -தேவைக்கேற்ப
பூண்டு -8
மிளகு -10
உப்பு -தேவைக்கேற்ப
சீரகம் -1 ஸ்பூன்
செய்முறை :
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி மேலே குறிப்பிட்டுள்ளவற்றை தாளித்து.அத்துடன் வெங்காயம் சேர்த்து நண்கு வதக்கவும்.
பின் பூண்டு,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.பிறகு தக்காளி மற்றும் அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து நண்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
அடுத்து மிளகாய் தூள்,மல்லிதூள் சேர்த்து வதக்கவும். கரைத்து வைத்துள்ள புளி சேர்த்து நன்கு கொதிக்க விடவும். உப்பு தேவைக்கேற்ப சேர்க்கவும்.
அதன் பின்பு குழம்பு கொதித்ததும் மீன் துண்டை அதில் சேர்க்கவும்.பிறகு அரைத்து வைத்துள்ளவற்றை இதணுடன் சேர்ந்து நன்கு கொதித்ததும் 2பூண்டை நைத்து தூவி விடவும்சுவையான திருக்கை மீன் குழம்பு ரெடி