அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியான பெட்ரோல் வங்கியில் கடந்த 13-ம் தேதி ஒரு கும்பல் 31.7 கிலோ நகையை கொள்ளையடித்து சென்றது. இதைத்தொடர்ந்து அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து அதே கிளை ஊழியர் முருகன் தான் இந்த கும்பலுக்கு தலைவனாக இருந்து செயல்பட்டு திட்டத்தை தீட்டி இருப்பது தெரியவந்தது. அவர் தனது நண்பர்கள் ஆன சந்தோஷ், பாலாஜி, செந்தில்குமார் ஆகியோரை அழைத்துக் கொண்டு கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இதை தொடர்ந்து மூன்று பேரையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 8.5 கோடி மதிப்புள்ள 18 கிலோ தங்க நகைகள், இரண்டு கார் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். 18 கிலோ தங்க நகைகள் திங்கட்கிழமை காலை அரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதை தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜீவால் உள்ளிட்ட அதிகாரிகள் அந்த நகைகளை பார்வையிட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக இருந்த முருகனை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நான்கு பேரையும் போலீசார் தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தினர் .தற்போது மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. அவரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.