சென்னை அரும்பாக்கம் வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்ட மொத்த நகையையும் தனிப்படை போலீசார் தற்போது மீட்டுள்ளனர்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெட்ரல் வங்கியில் பட்டப் பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்து ஊழியர்களை கட்டிப்போட்டு 32 கிலோ தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த வங்கியின் சார்பில் பொதுமக்களிடம் இருந்து அடமானமாக பெறப்பட்ட நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது. இதனால் வங்கி கிளை முன்பு ஏராளமான வாடிக்கையாளர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். கொள்ளை சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதே வங்கியின் இன்னொரு கிளையில் மண்டல மேலாளராக பணியாற்றிய முருகன் என்பவர் அவரது கூட்டாளியுடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து முருகனின் செல்போனை வைத்து துப்பு துலக்கும் பணியில் போலீசார் இறங்கினர். தனிப்படை அமைத்து முருகனையும் அவரது கூட்டாளியையும் பிடிக்க வலை விரித்தனர். இதில் முருகனுடன் சேர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருந்த சந்தோஷ், பாலாஜி, சக்திவேல், சூர்யா ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். வங்கி கொள்ளை தொடர்பாக கோவையில் உள்ள நகைக்கடை உரிமையாளரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதுவரை கொலை சம்பவத்திலிருந்து 28 கிலோ தங்கம் மீட்கப்பட்ட நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட மொத்த தங்கத்தையும் தனிப்படை போலீசார் தற்போது மீட்டுள்ளனர். ஏற்கனவே 28 கிலோ தங்கம் மீட்கப்பட்டிருந்த போது மேலும் 3.7 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட 31.70 தங்கநகரில் 700 கிராம் மட்டுமே உருக்கிய நிலையில் மற்ற தங்கம் அனைத்தும் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.