Categories
சினிமா

அருள்நிதியின் டைரி…. டிரைலரை வெளியிட்ட பிரபலங்கள்…. வைரல்….!!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாண்டியராஜனின் வம்சம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அருள்நிதி. இவர் நடிப்பில் ஜூலை 22ஆம் தேதி வெளியான ‘தேஜாவு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதற்கிடையில் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் டைரி. இந்தப் படத்தை இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கி அருள்நிதி ஹீரோவாக நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து “டைரி” படம் உண்மையில் நடந்த கதையில் கொஞ்சம் கற்பனை கலந்து உருவாகியுள்ளது.

இந்த படத்திற்கு யோகான் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் தமிழ்நாடு வெளியிடு உரிமையை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஏஜென்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இப்திரைப்படம் விரைவில் திரையரங்களில் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. திரில்லர் வடிவில் உருவாகி உள்ள இந்த டிரைலரை கமலஹாசன், விக்ரம் அமீர்கான் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

Categories

Tech |