Categories
சினிமா தமிழ் சினிமா

“அருவருப்பா இருக்கு” இப்படி கமெண்ட் பண்ணாதீங்க…. உங்க வீட்டிலும் பெண்கள் இருக்காங்க…!!!

தற்போது சமூக வலைதளங்களில் நடிகைகள் குறித்து படுமோசமாக கமெண்டுகள் செய்வது  சர்வசாதாரணமாக ஆகிவிட்டது. இதற்கு நடிகைகளும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து நடிகை சோனா பேசுகையில், சமூக வலைதளங்கள் மூலம் நிறைய பிரச்சினைகள் வருகிறது. நான் உட்பட பல கலைஞர்களும் தனிப்பட்ட முறையில் தாக்கப்படுகிறார்கள். இப்படி கமெண்ட் செய்வதை இனியாவது நிறுத்து கொள்ளுங்கள் என்பது என்னுடைய வேண்டுகோள்.

நாங்கள் நடிக்கும் ஒரு படத்தை பற்றி விமர்சிக்க உங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் எங்களுடைய அம்மா,அப்பா என்று படுமோசமாக விமர்சித்து கமெண்ட் செய்கிறீர்கள். நைட்டு படுக்க வரியான்னு கமெண்ட் பன்றாங்க. இந்த மாதிரியான விஷயங்கள் மிகவும் அருவருப்பாக இருக்கிறது என்று வருத்தப்பட  சோனா, உங்க வீட்டுலையும் பொம்பளைங்க இருக்குறாங்கண்ணு நினைச்சி பாருங்க. இனி இப்படி கமெண்ட் செய்யமாட்டார்கள் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |