சுற்றுலா பயணிகளின் வருகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் தென்மேற்கு பருவமழையானது தொடங்கியதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இந்த மழையின் காரணமாக சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இந்த அணையின் நீர்மட்டம் 163 அடியை தாண்டியதால் உபரி நீர் கேரளாவிற்கு திறந்து விடப்பட்டது. இந்நிலையில் வால்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ளது.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் மீண்டும் அலைமோதுகிறது. இவர்கள் ஆழியாறு மற்றும் கவியருவிக்கு செல்ல டிக்கெட் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக் கின்றனர். இதன் காரணமாக வால்பாறை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் நடைபாதை கடைகளிலும் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.