குற்றால அருவிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு குளிர்ந்த காற்று வீசி குளுகுளுவென வானிலை நிலவுகிறது. இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு சென்றுள்ளனர். இதனை அடுத்து மெயின் அருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.