Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அருவிகளில் வெள்ளப்பெருக்கு…. 3-வது நாளாக நீடிக்கும் தடை…. ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்…!!

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 3-வது நாளாக அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து அருவியில் குளித்து செல்கின்றனர். கடந்த 3 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று 3-வது நாளாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுகிறது. ஆனாலும் சுற்றுலா பயணிகளை போலீசார் குளிக்க அனுமதிக்கவில்லை. வெள்ளம் குறைந்ததும் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |