தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. அணைகளிலிருந்து தொடர்ந்து நீர் திறக்கப்பட்டு வருவதால் அருவிகள், ஆறுகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கனமழை காரணமாக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இரண்டாவது நாளாக 65 ஆயிரம் கனஅடியாக தொடர்ந்து நீடிக்கின்றது. நேற்று காலை 55 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, மாலையில் 65 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இன்றும் அதே அளவில் தொடர்கிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவிகள், ஆறுகளில் பொதுமக்கள் குளிக்கவும் , பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.