பிரேசிலின் பிரபலமான அருவியில் குளிக்க சென்ற மூவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலில் உள்ள ரிபா என்ற பிரபலமான அருவிக்கு ஆண்ட்ரியா மைக்கேல்ஸ்கி என்ற 46 வயது பெண் தன் மகள் அனா சோபியா மைக்கேல்ஸ்கி(9) மற்றும் உறவினர்களுடன் கடந்த 21 ஆம் தேதி அன்று குளிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென்று வெள்ளபெருக்கு ஏற்பட்டு அனைவரும் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
இதில் ஆண்ட்ரியா, சோபியா மற்றும் உறவினர் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள நான்கு பேரும் கடுமையான போராட்டத்திற்கு பின்பு கரை சேர்ந்துவிட்டனர். திடீரென்று நீர் மட்டம் அதிகரித்தது, மழையினால் அருகில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ரிவா அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது.
மேலும் ஆண்ட்ரியாவின் தலைமுடியும் நீருக்கு அடியில் இருந்த பாறையில் மாட்டிக்கொண்டது. இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு மூவரின் உடலையும் மீட்டிருக்கின்றனர். மேலும் குளிக்கப்போவதற்கு முன்பு ஆண்ட்ரியா தன் மகளுடன் எடுத்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி அஞ்சலி செலுத்தப்பட்டுவருகிறது