கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் கோவை குற்றால அருவி அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதால் சோதனை சாவடியில் இருந்து வனத்துறையினர் வாகனங்களில் சுற்றுலா பயணிகளை அருவிக்கு அழைத்து செல்கின்றனர்.
கடந்த 3 நாட்களாக அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் கோவை குற்றால அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் அங்கு செல்வதற்கு தடை விதித்தனர். மேலும் வனத்துறையினர் சோதனை சாவடி அருகே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.