Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அருவியில் இருந்து விழுந்த உடும்பு…. அலறியடித்து ஓடிய பெண்கள்…. 2 மணி நேர போராட்டம்…!!

பெண்கள் குளித்து கொண்டிருந்த போது குற்றால மெயின் அருவியில் உடும்பு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது ஐயப்ப பக்தர்களும் குற்றால அருவிகளில் குளித்து சொல்கின்றனர். நேற்று முன்தினம் பெண்கள் குளிக்கும் பகுதியில் இருக்கும் பாதுகாப்பு விளைவின் மீது திடீரென உடும்பு ஒன்று விழுந்தது. இதனை பார்த்த பெண்கள் அலறியடித்து கொண்டு அருவியில் இருந்து வெளியே ஓடினர்.

இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் உடும்பை பிடிக்க முயற்சி செய்தபோது அது தண்ணீர் உள்ளே செல்வதும், வெளியே வருவதுமாக இருந்ததால் அதனை பிடிக்க இயலவில்லை. இதனையடுத்து 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் உடும்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் பிடிபட்ட உடும்பு காட்டுப்பகுதியில் விடப்பட்டது. இந்த சம்பவம் சிறுது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |