மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் எதிரொலியாக மணிமுத்தாறு அருவியில் 3வது நாளாக தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 1ம் தேதி முதல் சாரல் மழை பெய்து வந்ததால், மணிமுத்தாறு அருவிக்கான நீர்வரத்து அதிகரித்து வந்தது.
இந்நிலையில், கடந்த 4ம் தேதி திடீரெனெ அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.