அருவியில் விழுந்த நபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு கடந்த 3-ஆம் தேதி அஜய் பாண்டியன் என்பவர் புகைப்படம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாறை மீது ஏறி நின்ற அஜய் பாண்டியனை அவருடைய நண்பர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது திடீரென கால் வழுக்கி அருவிக்குள் அஜய் பாண்டியன் விழுந்துவிட்டார். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் அஜய் பாண்டியனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு 26 பேர் 3 குழுக்களாக பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து தீயணைப்பு துறை வீரர்கள் 100 அடி பள்ளத்தில் கயிறு கட்டி இறங்கி அஜய் பாண்டியனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இன்று 4 நாள் ஆகியும் அஜய் பாண்டியன் கிடைக்கவில்லை. மேலும் அஜய் பாண்டியனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்களின் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.