Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அரைகுறையாக புதைந்திருந்த சடலம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

ஓடையில் புதைந்திருந்த நிலையில் மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அமிர்தராயன்கோட்டை- அணைக்குடம் கிராமங்களுக்கு இடையே பட்டா கோவில் ஓடை அமைந்துள்ளது. இந்நிலையில் சிதைந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்த கை ஒன்றை நாய் கவ்வி கொண்டு வருவதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த ஓடையின் ஒரு பகுதியில் பெண்ணின் சடலம் அரைகுறையாக புதைந்த நிலையில் இருந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அமிர்தராயன்கோட்டை பகுதியில் வசித்த காமாட்சி என்பது தெரியவந்துள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு காமாட்சி காணாமல் போய்விட்டார். தற்போது சடலமாக மீட்கப்பட்ட பெண் அணிந்திருந்த புடவை காமாட்சியின் புடவை தான் என்று அவரது மகள் சுவாதி உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காமாட்சி ஓடையில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது யாரேனும் கொலை செய்தனரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |