Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அரைகுறை ஆடையுடன் இருந்த இளம்பெண்” போலீசாரின் அதிரடி சோதனை…. பெண் புரோக்கர் உள்பட 3 பேர் கைது…!!

விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே மேலராமன்புதூரில் 2 பெண்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இங்கு இரவு நேரங்களில்  சில ஆண்களும், பெண்களும் வருவது வழக்கமாக இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் நேசமணி நகர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த வீட்டை ரகசியமாக கண்காணித்தனர். இந்நிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான ஒரு குழு அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்து சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது 26 வயதுடைய இளம்பெண் அரைகுறை ஆடையுடன் நின்றுள்ளார். அவருடன் 2 ஆண்களும் இருந்துள்ளனர். அந்த இளம்பெண்ணிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், இவரிடம் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜம் என்ற பெண்மணி அதிக பணம் வாங்கி தருவதாக கூறி விபச்சாரத்தில் ஈடுபட வைத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த வினு , ஜோஸ் மற்றும் பெண் புரோக்கர் ராஜம் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். மேலும் மீட்கப்பட்ட இளம்பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

Categories

Tech |