விபச்சாரத்தில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி புதுக்கடை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அவர்கள் ஒரு வீட்டிற்குள் நுழைந்து சோதனை செய்தபோது வாலிபரும் இளம்பெண்ணும் அரைகுறை ஆடையுடன் நின்றுள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அருமனை பகுதியை சேர்ந்த கனிஷ் என்பதும், இளம்பெண் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் வாலிபரை கைது செய்து இளம்பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் செய்த ராஜகுமார் என்பவரையும், வீட்டின் உரிமையாளரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.