Categories
மாவட்ட செய்திகள்

அரைக்கோணத்தில் கனமழை…. எத்தனை சேதம்?…. தாசில்தார் ஆய்வு….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து பெய்து வருகிறது. அதன்படி அரக்கோணம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனால் அன்வர்திகான்பேட்டையை சேர்ந்த சர்தார் சாயுபு கூரை வீட்டின் 3 பக்க சுவர்கள் இடிந்து விழுந்தது. அதனை தொடர்ந்து ஆத்தூர் கிராமத்தில் அமுதா, இராமாபுரத்தில் லட்சுமி, மிட்டபேட்டை இருளர் காலனியில் அர்சுனன், கடம்பநல்லூர் அண்ணா நகர் ராஜேந்திரன், வாணியம்பேட்டை இருளர் காலனி சந்திரா, தேசம்மாள், ரமணி ஆகியோர்கள் வசிக்கும் கூரை வீடுகளின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

மேலும் கும்மினிபேட்டை அருந்ததிபாளையத்தை சேர்ந்த வள்ளியம்மாள், மிட்டபேட்டையை சேர்ந்த சித்ரா ஆகியோரின் ஓட்டு வீட்டின் ஒரு பகுதியும் சித்தூர் கிராமம் மணந்தாங்கலை சேர்ந்த வேலு, ஓட்டு வீட்டின் மேல் கூரை பகுதி இடிந்து விழுந்தது. இதில் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலர்களுடன் அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Categories

Tech |