Categories
கிரிக்கெட் விளையாட்டு

அரையிறுதிக்கு செல்லுமா ஆஸ்திரேலியா? காத்திருக்கும் ரசிகர்கள்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியுற்றது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு 70 விழுக்காடு உறுதியானது.

சார்ஜா மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அணியின் கேப்டன் போலார்ட் 44 ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தொடக்க முதலே சிறப்பாக விளையாடி 16.2 ஓவரில் இலக்கை அடைந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவ்வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியயா அணிக்கு அரை இறுதி வாய்ப்பு என்பது 70 விழுக்காடு உறுதியானது. இருப்பினும் இரவு நடைபெறும் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அதிக ரன்ரேட்டுடன் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா  அணிக்கு அரையிறுதி வாய்ப்பு என்பது சோதனையில் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |