அனைத்து முருகன் கோவில்களிலும் தமிழில் மந்திரம் ஓதினால் அரை அம்மனத்தோடு அலகு குத்த தயார் என ஆ.ராசா சவால் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி அமைந்தால் மக்களுக்கு அனைத்து நலத்திட்டங்களையும் செய்து தருவதாக பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அனைத்து முருகன் கோவில்களிலும் தமிழில் மந்திரம் ஓதினால், அரை அம்மனத்தோடு ஆவடி டவுனில் வேலு ஏத்தி அலகு குத்தி முருகா முருகா என்று வலம் வர தயாராக உள்ளதாக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். மேலும் ஸ்டாலின் கையில் வேலேந்தி அது தொடர்பான விமர்சனங்களை அடக்குவதற்குள் ராசா இவ்வாறு சவால் விட்டிருப்பது அரசியல் அரங்கில் முக்கியமானதாக கருதப்படுகிறது.