Categories
சினிமா தமிழ் சினிமா

“அரை மணி நேரத்திற்கு கோடியில் சம்பளமா?”….. பிரபல நடிகையால் ஷாக்கான ப்ரொடியூசர்….!!!

30 நிமிடம் நடிப்பதற்கு 1 கோடி ரூபாயை நடிகை ராஷ்மிகா மந்தானா கேட்டுள்ளார். 

நடிகை ராஷ்மிகா மந்தானா கார்த்தியின் சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம், கோலிவுட்டில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியானார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. தற்போது பாலிவுட்டில் 3 படங்களை கைவசம் வைத்துள்ள ராஷ்மிகா, பான் இந்தியா நடிகையாக வளர்த்துள்ளார்.

இந்நிலையில் ரஷ்மிகா மந்தனா அவரது சம்பளத்தை நாளுக்கு நாள் உயர்த்தி வருகிறார். இதனால் பல தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராஷ்மிகா மந்தனா கீதா கோவிந்தன் திரைப்படம் வெளியானபோது 2 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். இதற்குப்பின் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்க தொடங்கினார்.

தற்போது அவர் நடித்து வரும் படங்களுக்கு சம்பளத்தை 5 கோடியாக அதிகரித்துள்ளார். மேலும் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தில் ராஸ்மிகாவை 30 நிமிடங்களுக்கு நடிப்பதற்கு படக்குழுவினர் கேட்டுள்ளனர். அதாவது ராம்சரணை இன்டர்வியூ எடுப்பது போன்ற காட்சிக்கு ரஷ்மிகா மந்தனா 1 கோடி கேட்டுள்ளார். இவ்வளவு சம்பளம் கேட்டதற்கு தயாரிப்பாளர் குறுகிய நேரத்திற்கு இவ்வளவு சம்பளமா என அதிர்ச்சி அடைந்துள்ளார். சில நடிகைகள் ஒரு படத்திற்கு ஒரு கோடி சம்பளம் தான் வாங்குகிறார்கள். ஆனால் குறுகிய நேரம் நடிப்பதற்கு ரஷ்மிகா ஒரு கோடி சம்பளம் கேட்பது அநியாயம். மேலும் கவர்ச்சியான பாடல் காட்சிகளுக்கு இவ்வளவு சம்பளம் கேட்டால் கொடுக்கலாம். ஆனால் இந்த மாதிரியான காட்சியில் நடிப்பதற்கு இவ்வளவு சம்பளம் கேட்பது அதிகம் என தயாரிப்பாளர் கூறியுள்ளார். மேலும் ரூ. 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே தற்போது ரூ.5 கோடி வரை தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம்.

Categories

Tech |