Categories
மாநில செய்திகள்

அர்ச்சகர்கள் நியமன வழக்கு…. ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

கடந்த 2020-ஆம் ஆண்டில் இந்து சமய அறநிலையத்துறை, கோயில்களில் பூசாரிகள், அர்ச்சகர்கள், பரம்பரை அறங்காவலர்கள் பணி நிபந்தனை மற்றும் நியமனம் தொடர்பாக புதிய விதிகளை கொண்டுவந்தது. அந்த வகையில் 18 வயதிலிருந்து 35 வயது வரை உள்ளவர்களை மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும், அவர் ஒரு ஆண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் கொண்டுவரப்பட்டது. இந்த புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில் அர்ச்சகர்கள் நியமனத்தை எதிர்த்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் வாரிசுகளை அர்ச்சகர்களாக நியமிப்பதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. மேலும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர் காலியிடங்கள் மற்றும் அவற்றை நிரப்புவதற்கான நடைமுறைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |