தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தில் 58 பேருக்கு பணி நியமன ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். பயிற்சி பள்ளியில் படித்த 28 அர்ச்சகர்கள் உட்பட 58 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் 1972இல் சட்டம் கொண்டு வந்தவர் அப்போதைய முதல்வர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றால் (கலாச்சாரம், அரசியலமைப்பு, நமது வரலாறு, பாரம்பரியம் நீங்கள் மாற்ற விரும்பும் போது) அனைத்து ஜாதியினரும் சமமான இட ஒதுக்கீடு கொடுங்கள். இதுதான் உண்மையான சமூக நீதி அல்லவா? என்று நடிகை காயத்ரி ரகுராம் ஆதங்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு திமுகவினர், மேடம் நீங்க கதறுவது தமிழ்நாட்டுக்கே கேட்குது என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.