Categories
சினிமா தமிழ் சினிமா

அர்ஜுனின் அதிரடியான ஆக்ஷன் காட்சி… வைரலாகும் ‘பிரண்ட்ஷிப்’ பட ஸ்னீக் பீக் வீடியோ…!!!

ஹர்பஜன்சிங், லாஸ்லியா இணைந்து நடித்துள்ள பிரண்ட்ஷிப் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பிரண்ட்ஷிப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கியுள்ள இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், சதீஷ், எம்.எஸ்.பாஸ்கர், குக் வித் கோமாளி பிரபலம் பாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சேன்ட்டோ பிலிம்ஸ் மற்றும் சினிமாஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.எம்.உதய குமார் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் வருகிற செப்டம்பர் 17-ஆம் தேதி இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் பிரண்ட்ஷிப் படத்தின் அசத்தலான ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அர்ஜுனின் அதிரடியான சண்டைக் காட்சிகள் இடம் பெற்றுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது ‌.

Categories

Tech |