Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அர்ஷ்தீப் சிங்” காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்பு படுத்திய விக்கிபீடியா…. மத்திய அரசு நோட்டீஸ்….!!!

ஆசிய கோப்பை போட்டியில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் 18-வது ஓவரில் ரவி பிஷ்னோய் வீசினார். அப்போது ரவி பிஷ்னோய் 17.3 ஓவரில் ஆசிப் அலி பந்தை வேகமாக அடிக்க முற்பட்டார். ஆனால் பந்து பேட்டில் படாமல் கீப்பருக்கு பின்னால் சென்றது. அந்த கேட்சை அர்ஷ்தீப் தவறவிட்டார். இது இந்தியா தோல்வி அடைந்ததற்கான‌ முக்கிய‌ காரணம் ஆகும்.

இந்நிலையில் சிங்கிள் விக்கிபீடியா தளத்தில் இந்தியா என்ற வார்த்தையை நீக்கிவிட்டு காலிஸ்தான் என்று பதிவிட்டுள்ளனர். இந்த பதிவு பல இடங்களில் இடம்பெற்று இருந்தது. ஆனால் 15 நிமிடங்களில் மாற்றப்பட்டது. இதன் காரணமாக கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப்பை காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புபடுத்தி பதிவு போட்டதுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அரசு சிங்கிள் விக்கிபீடியா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Categories

Tech |