Categories
மாநில செய்திகள்

அறங்காவலர்கள் இல்லாத கோயில்கள்…. ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள கோவில்களில் அறநிலையத்துறை ஊழியர்களை கோவில் பணி ஊழியர்களாக நியமித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.ஆர்.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி முன் விசாரணைக்கு வந்த போது மனுதாரர், அறங்காவலர்களுக்கு மட்டுமே கோவில் ஊழியர்களை நியமிப்பதற்கு அதிகாரம் உள்ளது. இந்த விஷயத்தில் அறநிலையத்துறை ஆணையருக்கு எந்த விதமான அதிகாரமும் கிடையாது.

தமிழகத்தில் சுமார் 19,000 கோவில்களில் அறங்காவலர்களே இல்லை என்று கூறப்பட்டது. ஆனால் அரசு தரப்பில், உள்ளாட்சி தேர்தல் காரணமாக நியமன நடைமுறைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அறங்காவலர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். அறங்காவலர்கள் நியமன நடைமுறைகளும் தொடங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறங்காவலர்கள் இல்லாத கோவில்களின் நலன் கருதி கோவில் ஊழியர்கள் அறநிலையத்துறை ஊழியர்கள் பணியில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து நீதிபதி, பல ஆண்டுகளாக கோவில்களில் அறங்காவலர்களை நியமிக்காதது துரதிஷ்டவசமானது என்று கூறினார். மேலும் அறங்காவலர்கள் நியமனத்தை நீதிமன்றம் உன்னிப்பாக கண்காணிக்கிறது. எனவே விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என நம்புகிறோம். அதோடு மட்டுமில்லாமல் அறங்காவலர்கள் இல்லாத கோவில்களில் தற்காலிகமாக ஊழியர்களை அயல்பணியில் நியமித்தது சட்டவிரோதமானது அல்ல என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |