அறநிலையத்துறை நிலத்தை பிற தேவைகளுக்கு பயன்படுத்த கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாமக்கல் அருகே வையப்பமலை சுப்பிரமணியசுவாமி கோயில் புறம்போக்கு நிலத்தை வகை மாற்றம் செய்து 81 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கியதை எதிர்த்து கோயில் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நிலத்தை 81 பேருக்கு பட்டா போட்டதாக தொடரப்பட்ட இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது அறநிலையத்துறை நிலத்தை கோயில் பயன்பாடு தவிர பிற தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.