திமுக-பாஜாகாவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கியில் திமுக சார்பாக ஏப்ரல் 15ஆம் தேதி நடந்த பட்டிமன்றத்தில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியைச் சார்ந்த நாஞ்சில் சம்பத் விடுதி ஒன்றில் தங்கி இருந்தார். நாஞ்சில் சம்பத் பாஜக தலைவர்களை அவதூறாக பேசியதால் பாஜக நிர்வாகிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டினார்கள்.
இதுபற்றி தகவல் அறிந்து திமுகவினர் சம்பவ இடத்திற்கு வந்தார்கள். பின் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து இரு தரப்பினரும் அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்கள். இதைத்தொடர்ந்து பாஜகவை சேர்ந்த 27 பேர் மீதும் திமுகவை சேர்ந்த 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்.