Categories
Uncategorized

“அறப்போர் இயக்கத்திற்கு தடை விதிக்க கோரி மனு”…. உயர்நீதிமன்றம் அதிரடி முடிவு….!!!!

தமிழ்நாட்டில் கடந்த 2019 -2021 ஆம் வருடங்களுக்கு இடையில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களில் நல்ல நிலையிலுள்ள சாலைகளை மீண்டும் போட்டதன் வாயிலாக ரூபாய் 692 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சமூகஊடகங்களில் அறப்போர் இயக்கம் தரப்பில் ஆதாரங்கள் வெளியிடப்பட்டது. இவ்விவகாரம் குறித்து அதிமுகவின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி சமூகவலைதளங்களிலும் அறப்போர் இயக்கம் செய்திகளை வெளியிட்டு வந்தது. இதையடுத்து அறப்போர் இயக்கம் என்ற அமைப்புக்கு தடைவிதிக்க கோரி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அவதூறு ஏற்படுத்திய அறப்போர் இயக்கம் 1 கோடியே 10 ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

உண்மைக்கு புறம்பான தகவல்களை இந்த அமைப்பு பரப்புவதாகவும், ஆகவே அறப்போர் இயக்கத்திற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பே இந்த குற்றச்சாட்டுக்கள் பொது வெளிக்கு வந்துவிட்டதாக தெரிவித்தார். ஆகவே அறப்போர் இயக்கத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி அறப்போர் இயக்கத்துக்கு உத்தரவு பிறப்பித்தார். அறப்போர் இயக்கத்தின் மீது தடை விதிக்க மறுத்தாலும், அந்த இயக்கம் அளிக்கும் பதிலை பெற்றபின் மனு விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்த நீதிபதி , மனுவின் மீதான விசாரணையை ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார். அதேநேரம் நோட்டீஸ் அனுப்பிய பிறகும் அறப்போர் இயக்கம் தொடர்ந்து இவ்விவகாரம் குறித்து பதிவிட்டால் அதை நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவரும்படியும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |