Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அறிகுறி இருப்பவரின் வீட்டிற்கே சென்று கண்காணிக்க வேண்டும்…. அரசு அதிகாரியின் அதிரடி உத்தரவு…. ராணிப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி….!!

ராணிப்பேட்டையில் இருமல், சளி இருக்கும் நபர்களை அவர்களுடைய வீட்டிற்கே சென்று மேற்பார்வையிட வேண்டும் என்று கண்காணிப்புகான அலுவலர் உத்தரவிட்டார்.

ராணிப்பேட்டையில் அமைந்திருக்கும் கலெக்டர் அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்கில் கொரோனா பரவலை தடுப்பதற்கு பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் அனைத்து துறை அலுவலர்களுடன் நடைபெற்றது. இதற்கு மாவட்டத்தினுடைய கலெக்டரான கிரான்ஸ்டன் முன்னிலை வகித்துள்ளார்.

மேலும் மாவட்டத்தினுடைய கண்காணிப்பு அலுவலரான லட்சுமி தலைமை தாங்கினார். மேலும் அவர் கூறியதாவது, சளி, இருமல்,காய்ச்சலிருக்கும் நபர்களை தினந்தோறும் அவர்களுடைய வீட்டிற்கே சென்று கண்காணிக்க வேண்டும் என்றுள்ளார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவர்களுடன் தொடர்பிலிருக்கும் நபர்களுக்கும் முறையான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Categories

Tech |