அறிகுறி இல்லாத கொரோனா நோய் தொற்று 381 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகில் முதல் கொரோனா நோய் தொற்று சீனாவில் உகான் நகரில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை இந்த கொரோனா நோய் தொற்று உருவாக்கியுள்ளது. இந்த கொரோனா தடுப்பூசி போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படியாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருகின்றன. இந்நிலையில் சீீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அந்நாட்டின் முக்கிய இடங்களான பெய்ஜிங், ஷாங்காய் மற்றும் ஜிலின் போன்ற பல்வேறு பகுதிகளில் இந்த கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகின்றது.
தற்போது சீனாவில் 478 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து நேற்று முன்தினம் 409 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அந்த வகையில் 381 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. மேலும் சீனாவில் இதுவரை மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 397 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.