Categories
தேசிய செய்திகள்

அறிமுகமானது டிஜிட்டல் கரன்சி…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

ரிசர்வ்வங்கி நேற்று டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தியது. இந்த வங்கியானது முதலாவதாக இந்த டிஜிட்டல் ரூபாயை மொத்தவிற்பனைப் பிரிவில் முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தும். அத்துடன் இந்த வங்கி அடுத்த மாதத்தில் சில்லறை வர்த்தகப்பிரிவின் டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. சில்லறை விற்பனைப்பிரிவின் டிஜிட்டல்கரன்சி தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலும், நெருங்கிய குழு வாடிக்கையாளர்கள மற்றும் வணிகர்களுக்கும் வழங்கப்படும். முன்பாக இந்த வருடம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிதி அமைச்சர் “இந்த நிதி ஆண்டில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும்” என கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 9 வங்கிகள் (அதாவது, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் மற்றும் எச்எஸ்பிசி உள்ளிட்ட 9 வங்கிகள்) கொண்ட இந்த கரன்சியை ரிசர்வ்வங்கி அறிமுகப்படுத்த இருக்கிறது. பெரியப் பணம் செலுத்த டிஜிட்டல் ரூபாய் பயன்படுத்தப்படும். வங்கி கூற்று படி, இது அரசு பத்திரங்களை வாங்குதல், விற்பது குறித்த தீர்வுக்கு பயன்படுத்தப்படும். ரிசர்வ் வங்கியானது அக்டோபர்-7,2022 அன்று டிஜிட்டல் கரன்சிக்கான முன்னோடித் திட்டத்தை விரைவில் துவங்கபோவதாக தெரிவித்திருந்தது.

இத்திட்டத்தில், டிஜிட்டல் பணத்தினுடைய பயன்பாடு குறைந்த எண்ணிக்கையில் ஆன நபர்களுக்கு வைக்கப்பட்டு உள்ளது. இந்த முன்னோடி திட்டத்தின் முடிவுகளின்படி, இது பரவலாக சந்தையில் கொண்டுவரப்படும். இதனிடையில் சமூகஊடக யுகத்தில் பரவிவரும் வதந்திக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் படி , டிஜிட்டல் கரன்சியை கொண்டுவந்த பிறகும் ரிசர்வ் வங்கி தொடர்ந்து நோட்டுகளை அச்சடிக்கும் என தெளிவாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் கருப்புபணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அறிவிக்கப்பட்ட இந்த கரன்சிமுறை, அடுத்த ஒரு மாதத்தில், சில்லரை வர்த்தக அளவில் இந்த கரன்சியின் பயன்பாட்டு முறையை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Categories

Tech |