Categories
ஆட்டோ மொபைல்

அறிமுகமான யமஹாவின் புது 125சிசி ஸ்கூட்டர்…. என்னென்ன அம்சங்கள்?…. நீங்களே பாருங்க….!!!!!

யமஹா நிறுவனம் 2023 ஃபுளூ 125 ஸ்கூட்டரை பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. இதே ஸ்கூட்டர் இந்தோனேசியா சந்தையில் ஃபிரீ கோ என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இருந்தாலும் புது மாடல் தோற்றத்தில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி டிசைன் மற்றும் ஸ்டைலிங்கை பொருத்தவரை புதிய யமஹா ஃபுளூ மாடல் முந்தைய தலைமுறை யமஹா ரே இசட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் அப்ரிலியா எஸ்.ஆர். 125 மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கின்றது. புதிய ஃபுளூ மாடல் கூர்மையான தோற்றம் கொண்டிருக்காமல், ஃபன்கியாக காட்சியளிக்கிறது.
 இந்த என்ஜின் 9.6 பி.ஹெச்.பி. பவர், 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதே போன்ற செயல்திறன் வழங்கும் 2 ஸ்கூட்டர்களை யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் வற்பனை செய்யப்பட்டு வருகின்றது.  தற்போது இந்திய சந்தையில் கிடைக்கும் யமஹா ரே இசட்.ஆர். 125 மற்றும் பசினோ 125 போன்ற மாடல்களும் இதே போன்ற வெளிப்படுத்துகிறது.  அந்த வகையில் புதிய யமஹா ஃபுளூ மாடலில் ஏ.பி.எஸ். வசதி, 25 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜ், யு.எஸ்.பி. சார்ஜிங், முழுமையான எல்.இ.டி. லைட்டிங், சிறிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |