அறியாமல் செய்த பாவங்கள் நீங்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் முதலில் கோமாதாவை வழிபாடு செய்யுங்கள்.
கோமாதா என்று போற்றப்படும் பசுவிற்கு அகத்திக் கீரை தருவதால், நாம் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். இந்த அரியா பாவங்களால் உண்டாகும் தோஷங்களும் விலகிவிடும். முன்னோருக்கு செய்ய வேண்டிய திதியை செய்யாமல் இருந்தால் ஏற்படும் பாவம் அகத்தி கீரை கட்டை பசுவுக்கு தருவதால் நீங்கும். மேலும் பித்ரு தோஷங்களும் நீங்கும். பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும். மா” என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்கலத்தை தருகிறது. கோமாதாவை சிரத்தையுடன் வணங்கிட பிரம்மா, விஷ்ணு, முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜித்த புண்ணியம் நமக்கு கிடைக்கும்.