ரஷ்யா பிப்ரவரி 16ஆம் தேதியன்று உக்ரைன் மீது படையெடுக்கும் என அந்நாட்டு அதிபர் தனது முகநூல் பக்கத்தில்பதிவிட்டுள்ளார்.
உக்ரைன், ரஷ்யா எல்லையில் கடந்த சில நாட்களாக போர் பதற்றம் அதிகரித்துள்ளது. சுமார் 1,30,000 க்கும் மேற்பட்ட வீரர்களை ரஷ்யா எல்லையில் குவித்துள்ளது. மேலும் இது பற்றிய சாட்டிலைட் படங்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள பெலாரஸில் ரஷ்ய வீரர்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் பயிற்சி முடித்த பிறகு வீரர்கள் ரஷ்யா திரும்பி விடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இருந்தபோதும் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது.
முகநூல் கருத்து குறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் விடுத்துள்ள அறிக்கையில்,”உக்ரைன் மீது நாளை படையெடுப்பு செய்வதற்கு புதிய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுவதில் நம்பிக்கை இல்லை எனவும், அதே நேரத்தில் எந்த முன்னறிவிப்புமின்றி தாக்குதல் தொடுக்க கூடிய நிலையில் தயாராக இருப்பதாகவும்” கூறியுள்ளது. மேலும் உக்ரைன் மீது ரஷ்யா வருகிற பிப்ரவரி 16ஆம் தேதியன்று படையெடுக்கும் என முன்னாள் அதிபர் செயலகத்தில் தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார்.