கொரோனா வைரஸ் பரவல் தாக்கத்தால்… நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் முடக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கான தேர்வுகள், கல்வி சார்ந்த அனைத்து விஷயங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தாமல் இருப்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறந்தால்தான் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்த முடியும் என அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக இந்த ஆண்டிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அரசு பணியிடங்களில் 50% தான் நிரப்ப முடியும். நடத்த இயலாத தேர்தல் அடுத்த ஆண்டு தேர்வு கால அட்டவணையில் சேர்க்கப்பட்ட தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.