தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிய வில்லை என்றால் அபராதம் விதிக்கும் விதி முறையை மீண்டும் அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின், “அறிவியலின் கொடையான தடுப்பூசி போட்டுக்கொள்வோம், மாஸ்க் அணிவோம்” என்று டுவிட் செய்துள்ளார்.