அறிவியல் கண்காட்சியில் மீன்சுருட்டி அரசு மகளிர் பள்ளி மாணவி மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அரியலூர் அரசு மாதிரி பள்ளியில் கடந்த 8ஆம் தேதி பள்ளி கல்வித் துறை சார்பாக மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்று படைப்புகளை உருவாக்கி காட்சியளித்தனர். அதில் மீன்சுருட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஜெய் அபிநயா “நம்மை சுற்றி உயிருள்ள பொருட்கள்” என்ற தலைப்பில் மனிதனின் கண் செயல்படும் விதம் குறித்து படைப்பை உருவாக்கி காட்சிப்படுத்தினார். இந்த மாணவியின் படைப்பு மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தை பிடித்தது. இந்த மாணவியை பாராட்டி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் பரிசு வழங்கினார்.