நகிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா என்கிற திட்டத்தில் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் தேர்வுகள் அனைத்து மொழிகளிலும் நடத்தப்படவேண்டும் என்று மத்திய அறிவியில் மற்றும் தொழில் நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு மதுரை எம்பி சு. வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், ” அறிவியல் முனைப்பிற்கும் ஹிந்திக்கும் என்ன தொடர்பு? கிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா என்கிற திட்டத்தில் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் தேர்வுகள் அனைத்து மொழிகளிலும் நடத்தப்படவேண்டும்.கேரளத்திற்கு 13 தேர்வுமையங்கள்.ஆனால் தமிழகத்திற்கு 9 மையங்கள் தானா? விண்ணப்ப கட்டணம் குறைக்கப்பட வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.