இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அறிவியல் நாள் பிப்ரவரி 28 ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகலை ஆராய்ந்து வெளியிட்ட வரும் சிறந்த இயர்பியல் மேதையுமான சர் சி வி ராமன். தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ராமன் விளைவு ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது.
தேச தலைவர்கள் மற்றும் தியாகிகளை கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 1987 ஆம் ஆண்டு இந்த தேசிய அறிவியல் நாள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.