தெருக்குரள் அறிவும் இசையமைப்பாளர் அனிருத்தும் இணைந்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை உருவாக்கி வருகின்றனர்.
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ‘வாத்தி கம்மிங்’ எனும் பாடல் மூலம் பிரபலமானவர் தான் தெருக்குரல் அறிவு. ஆனால் அதைவிடவும் ‘என்ஜாயி என்ஜாமி’ எனும் பாடல் மூலம் இவர் சர்வதேச அளவில் பிரபலமாகியுள்ளார். இந்நிலையில் அறிவு புதிதாக கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடவுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
மேலும் அவருடன் முன்னணி இசையமைப்பாளர் அனிருத்தும் இணைந்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கும் இந்த விழிப்புணர்வு வீடியோவை பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.