Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அறுசுவை வடை…..தீபாவளி ஸ்பெஷல்…செய்து அசத்துங்க…!!!

தீபாவளி- அறுசுவை வடை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: 

வடை செய்ய தேவையான பொருள்கள் :

உளுந்தபருப்பு                  – 250 கிராம்
சின்ன வெங்காயம்       – 50 கிராம்
பச்சை மிளகாய்              – 6 எண்ணம் (மீடியம் சைஸ்)
கறிவேப்பிலை                – 3 கீற்று
உப்பு                                      – தேவையான அளவு
மல்லி இலை                     – 3 கொத்து
சமையல் எண்ணெய்  – பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

முதலில் உளுந்தம் பருப்பினை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அலசி கிரைண்டரில் இட்டு கெட்டியாகவும் ஆட்டி எடுக்கவும்.

பின்பு மாவை அரைக்கும் போது சிறிதளவு தண்ணீரை தெளித்துக் கொண்டே அரைக்கவும். மாவில் சிறிதளவினை எடுத்து தண்ணீரில் போட்டால் மிதக்கும். அதுவே மாவினை வெளியே எடுக்க தேவையான பதம் ஆகும்.

மாவினைத் தோண்டுவதற்கு முன்பு சிறிதளவு உப்பினைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றி மாவினைத் தோண்டவும். பின் சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை சதுரத் துண்டுகளாக வெட்டவும். கறிவேப்பிலையை உருவி அலசி ஒன்றிரண்டாகக் கிள்ளிக் கொள்ளவும். மல்லி இலையை சுத்தம் செய்து அலசி சிறுதுண்டுகளாக வெட்டவும்.

ஆட்டிய உளுந்த மாவுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லி இலை ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து சமையல் எண்ணெயை ஊற்றி காயந்ததும், சிறிதளவு மாவினை எடுத்து வாழை இலையில் வைத்து நடுவில் துளையிட்டு எண்ணெயில் போடவும். ஒருபுறம் வெந்ததும், மறுபுறம் திருப்பி வேகவிடவும். எண்ணெய் குமிழி அடங்கியதும் வடையை எடுத்து பரிமாறவும். இப்போது சுவையான அறுசுவை வடை தயார்.

Categories

Tech |