மின்சாரம் தாக்கி விவசாயி மற்றும் பசுமாடு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திருச்சி மாவட்டம் கிருஷ்ணகவுண்னூடரை சேர்ந்தவர் ராகவன்.இவர் ஒரு விவசாயி இவரது வீட்டின் கட்டுத்தறியில் கட்டியிருந்த பசு மாட்டின் மீது மின்கம்பத்தில் கட்டியிருந்த கேபிள் ஒயரின் ஒருபகுதி அறுந்து விழுந்தது.அதன் மற்றொரு பகுதி மின் கம்பியில் பட்டதால் பசுவின் மீது அறுந்து விழுந்த கேபிள் ஒயரில் மின்சாரம் பாய்ந்துள்ளது,இதனைப் பார்த்த ராகவன் பசுவினை காப்பாற்ற சென்றுள்ளார்.அப்போது அவரின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது இதையடுத்து சம்பவ இடத்திலேயே ராகவன் உயிரிழந்ததோடு அவரது பசு மாடும் உயிரிழந்தது.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கும் மின் வாரிய ஊழியர்களுக்கும் தகவல் அளித்துள்ளனர்.இதனை அறிந்து விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் கேபிள் ஒயரை பாதுகாப்பாக அகற்றியுள்ளனர்,பின் ராகவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.