Categories
தேசிய செய்திகள்

அறுந்து விழுந்த பாரசூட்…. நடுக்கடலில் விழுந்த தம்பதி…. வெளியான ஷாக் வீடியோ…!!!

டையூ பகுதியில் பாராசூட் மூலமாக நடுவானில் பறந்து சாகசம் செய்த தம்பதியினர் கயிறு அறுந்ததால் நடுக் கடலில் விழுந்து உயிர் தப்பியுள்ளனர். இந்த விபத்து குறித்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த தம்பதியினர் சம்பவத்தன்று  டையூ தீவில் உள்ள Nagoa கரையில் பாராசூட்டில் பறந்து சாகசகம் செய்துள்ளனர். அப்போது நடுவானில் பறந்தபோது கயிறு அறுந்த காரணத்தினால் தம்பதியர் இருவரும் கடலில் விழுந்துள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக அவர்கள் லைஃப்-ஜாக்கெட் அணிந்திருந்த காரணத்தால் கடல் விழுந்தும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்படுகின்றது. தகவலறிந்த உயிர் காக்கும் மீட்பு படையினர் உடனடியாக வந்து அவர்களை மீட்டுள்ளனர். அவர்கள் பாராசூட்டில் பறந்த போது அஜித்தின் சகோதரர் அதை வீடியோவாக படம் எடுத்துள்ளார். அப்போது அவர்கள் இருவரும் கீழே விழுந்ததை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.

Categories

Tech |