Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அறுவடைக்குப்பின் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்…. விதைச்சான்று உதவி இயக்குனர் விளக்கம்…!!

அறுவடைக்குப்பின் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விதைச்சான்று உதவி இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் ஷீபா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் விவசாயிகளுக்கு அறுவடைக்குப் பிறகு செய்ய வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கமளித்துள்ளார். அதாவது அறுவடைக்கு முன்பு அறுவடை செய்யும் எந்திரங்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டும் எனவும், அதன் மூலம் பிற ரக கலப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும் எனவும் கூறியுள்ளார். அதன்பிறகு அறுவடை செய்யப்படும் நெல் பயிரில் முதல் இரண்டு மூட்டைகளை தவிர்த்து அதன்பிறகு சேகரிக்கும் நெல்லை விதைக்கு  எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து நெல் விதைகளை புதிய கோணிப்பையில் மட்டுமே சேகரிக்க வேண்டும் எனவும், சேகரிக்கப்பட்ட விதை நெல்லை உடனடியாக காயவைத்து 13% ஈரப்பதத்திற்குள் வைக்க வேண்டும்.

இதில் தாமதம் செய்தால் விதைகளில் பூஞ்சனா வளர்ச்சி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாக நெல் விதைகள் முளைக்கும் அபாயம் நேரிடும். இதை தவிர்ப்பதற்காக நெல் விதைகளை மிதமான வெயிலில் பரப்பி காய வைக்க வேண்டும். இதன் மூலம் முளைப்புத்திறன் ஏற்படும் அபாயத்தை தவிர்க்கலாம். இதைத்தொடர்ந்து 13 சதவீதம் இருக்கும் நெல் விதைகளை கோணிப்பையில் சேகரித்து சான்றளிப்பு நிலை, ரகம், பயிர், விதைச்சான்று எண் போன்றவற்றை எழுதி கோணி பையிலிருக்கும் நெல் மூட்டைகளில் வைத்து தைக்கவேண்டும். இந்த  அறிக்கையை ஸ்பெக்ஸ் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இதைத்தொடர்ந்து விதைச்சான்று அலுவலர் அந்த நெல் மூட்டைகளை ஆய்வு செய்து அதில் முத்திரையிட்டு விதை சுத்தி நிலையத்திற்கு அனுப்பப்படும். இந்த முறைகளை விவசாயிகளும், உற்பத்தியாளர்களும் கட்டாயம்  பின்பற்ற வேண்டுமென கூறியுள்ளார்.

Categories

Tech |