Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“அறுவடைக்கு தயாராக இருக்கும் சம்பா சாகுபடி”…. விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கும் நிகழ்ச்சி…!!!!!

கீழையூரில் இருக்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழையூர் ஒன்றிய பகுதியில் குறுவை சாகுபடி நிறைவு பெற்று அறுவடைக்கு தயாராகி உள்ளது. இந்நிலையில் சம்பா சாகுபடிக்கான பணிகள் தீவிரமடைந்து வருகின்றது.

மேலும் அதற்காக கீழையூரில் இருக்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் சம்பா சாகுபடிக்கு பயிர் கடன் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பால்ராஜ் தலைமை தாங்க செயல் அலுவலர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் 130 விவசாயிகளுக்கு 51 லட்சத்து 39 ஆயிரத்து 588-க்கான காசோலை வழங்கப்பட்டது.

Categories

Tech |