பருத்தி சாகுபடிக்கு தேவையான தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குகன்பாறை, சத்திரம், வால்சாப்புறம் , கஸ்தூரிரெங்கபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஏக்கரில் பருத்தி பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இந்நிலையில் அறுவடைக்கு தயாராக இருக்கும் பருத்தி பயிர்களுக்கு தேவையான தண்ணீர் இல்லாததால் பருத்திச் செடிகள் காய்ந்த நிலையில் காணப்படுகிறது.
இதனால் விவசாயிகள் அருகில் உள்ள குளம், குட்டைகளில் தேங்கி கிடக்கும் தண்ணீரை மோட்டார் மூலம் பருத்தி செடிகளுக்கு பாய்ச்சி வருகின்றனர் . இந்த குட்டைகளில் இருக்கும் தண்ணீர் கொஞ்ச நாட்கள் வரைதான் போதுமானதாக இருக்கும் என விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.